மலர் விழியாய்
என் விழி வந்தவளே
உன் விழியின்
மை அழகானது
உன் விழியில்
இருப்பதனால்
என் விழிகொண்டு
உன் மைவிழி
ரசித்தேன்னடி
என் மனதினை
இருக்கண்கொண்டு
கொய்தவளே
உயிருள்ள தூரிகையே
என் மனம் தேடும்
தாரகையே
உன் மனக்கதவை
திறந்துவிட்டு
என் காதல் காற்று
உனக்குள்ளும் வீசுமடி